திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் சார்பாக தீ விபத்து தடுப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சார மினி மராத்தான் போட்டி நடைபெற்றது.
மராத்தான் போட்டியை திருநெல்வேலி மண்டல துணை இயக்குனர், சரவண பாபு கொடியசைத்து துவங்கி வைத்தார்கள் உடன் திருநெல்வேலி மாவட்ட தீயணைப்பு அலுவலர், பானுப்ரியா உதவி மாவட்ட அலுவலர், கார்த்திகேயன் நிலைய அலுவலர்கள் பாலசுப்பிரமணியன், சுந்தரம் மற்றும் தீயணைப்பு வீரர்கள் 70 பேர் கலந்து கொண்டனர்.
இது குறித்து மண்டல துணை இயக்குனர், சரவண பாபு கூறுகையில் பொதுமக்களுக்கு தீ தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த மினி மராத்தான் போட்டி நடைபெறுகிறது. மேலும் விடுமுறை காலமாக இருப்பதால் குழந்தைகளை பெரியோர்கள் துணையில்லாமல் நீர் நிலைகளுக்கு அனுப்ப வேண்டாம். அனைவரும் நீச்சல் கற்றுக் கொள்வது அவசியமாகும். பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் உள்ள அரசு நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்சியை அவசியம் கற்றுக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டார். பொது மக்களிடமும் இது பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்