திருநெல்வேலி: தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு தேர்வான 672 புதிய தீயணைப்பு வீரர்களுக்கான மூன்று மாத கால பயிற்சியானது மாநிலம் முழுவதும் (02.04.2025) முதல் ஆரம்பமானது. இதில் மூன்று மாவட்டங்களில் தேர்வாகியுள்ள 97 தீயணைப்பு வீரர்களுக்கு நடைபெற உள்ள இந்த பயிற்சி நிகழ்ச்சியை திருநெல்வேலி மண்டல துணை இயக்குனர், சரவண பாபு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தீயணைப்பு வீரர்களுக்கான தற்காலிக பயிற்சி மையத்தின் முதல்வரும், திருநெல்வேலி மாவட்ட தீயனைப்பு அலுவலருமான, பானுப்பிரியா, கன்னியாகுமரி மாவட்ட தீயணைப்பு அலுவலர், சத்திய குமார் தூத்துக்குடி மாவட்ட தீயணைப்பு அலுவலர், கணேசன் மாவட்ட உதவி அலுவலர்கள் வெட்டும் பெருமாள், பிரதீப் குமார் மற்றும் பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்