திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N.சிலம்பரசன்., அவர்களின் உத்தரவின்படி, மாவட்ட காவல்துறையினர் தங்கள் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட முக்கிய இடங்கள் வழியாக சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து போதை பொருள் பயன்படுத்துவதின் தீமைகள் குறித்தும், வீடுகளில் திருட்டு நடைபெறாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், சாலை பாதுகாப்பு குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து தொடர்பு கொள்ளும் 1098 எண்ணை பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.