கிருஷ்ணகிரி: ஓசூர்-பிப்ரவரி, 20, 2024-கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அவர்களின் ஆணையின்படி கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் சார்பில், ஓசூர் ஆர். வீ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் துவங்கியது. பேரணியை ஓசூர் சார் ஆட்சியர் செல்வி. ர. அ. பிரியங்கா இ.ஆ.ப துவக்கி வைத்தார்கள். பேரணியில் கல்லூரி மாணவ மாணவிகள் கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு அடங்கிய பதாகைகள் ஏந்தி சென்றனர்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் விழிப்புணர்வு குறித்த பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. பேரணியில் துணை காவல் கண்காணிப்பாளர் (மதுவிலக்கு) திரு. சிவலிங்கம், ஓசூர் வட்டாட்சியர் திரு. விஜயகுமார், கோட்ட ஆய அலுவலர் திரு. ஜெயபால், ஆய மேற்பார்வை அலுவலர்கள் திரு. சரவணன், திருமதி. ரெஜினா, வட்ட வழங்கல் அலுவலர் திரு. பெருமாள், வருவாய் ஆய்வாளர் திரு. ரமேஷ் மற்றும் பேரணியில் அரசு கலைக் கல்லூரி, செயின்ட் ஜோசப் ஐடிஐ, பி எம் சி பொறியியல் கல்லூரி, மகரிஷி வித்யாலயா பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். நேதாஜி சாலை வழியாக ஓசூர் சார் ஆட்சியர் அலுவலகத்தை சென்றடைந்தது.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்