திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப. தலைமையில், பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாட மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள், ஆலயங்கள் மற்றும் வணிக வணிகங்கள் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும் 45 இருசக்கர வானங்கள் மற்றும் 36 நான்கு சக்கர வாகனங்கள் மூலம் காவல்துறையினர் 24 நேரமும் சுழற்சி முறையில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் 53 இடங்களில் வாகன சோதனை சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளது. பட்டாசு விற்பனை மையங்களில் தீயணைப்பு துறை மற்றும் காவல்துறை இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கூட்டநெரிசலை கண்காணிக்க CCTV கேமராக்கள், Body Worn Camera, Can Watch Towers அமைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இது பற்றி கூறுகையில் பொதுமக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடனும் பாதுகாப்புடனும் தீபாவளியை கொண்டாடுவதற்காக, மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்களும், காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு நல்கி, அமைதியான முறையில் பண்டிகையை கொண்டாட கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் எந்த ஒரு செயல் அல்லது முயற்சி நடைபெறும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது எவ்வித சமரசமும் இல்லாமல் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் தங்களது பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் அல்லது பொருட்கள் இருப்பதை கவனித்தால் உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
முன்னதாக பொதுமக்கள் அனைவருக்கும் தன்னுடைய இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்