மதுரை: மதுரை விளக்குத்தூன் பகுதியில் தீபாவளி துணி வாங்க கூடியிருக்கும் மக்கள் கூட்டம் தான் இது. மதுரை மாநகர காவல் துறையினரின் சிறப்பான பாதுகாப்பு முன்னேற்பாடுகள். ஆங்காங்கே காவல் கண்காணிப்பு கோபுரம் அமைத்து மக்களை நிமிடத்திற்கு நிமிடம் எச்சரிக்கை செய்துபாதுகாப்பு பற்றி விளக்கம் கூறி மக்கள் நெரிசலில் சிக்கிக்கொல்லாமல் சிறந்த வழிகாட்டியாக செயல்படுகிறது. மேலும் உடல்நலன்களில் அக்கறை செலுத்துமாறு அறிவித்து காவல்துறை மக்களின் நண்பனாக சிறப்பாக செயல்படுகிறது. தீயணைப்பு வாகனம். மருத்துவ வாகனம் என உச்சக்கட்ட பாதுகாப்பு முன்னேற்பாடுகளை காவல் துறையினர் வழங்கி உள்ளனர். மக்களின் தோழனாக காவல்துறையின் செயல்பாடு உள்ளது. மதுரை மாநகர் காவல்துறையின் சிறப்பான பாதுகாப்புடன் மதுரை தீபாவளி கொண்டாட்டம் சிறப்பாக உள்ளது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்