திருநெல்வேலி: தீபாவளி பண்டிகையையொட்டி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன், இ.கா.ப., உத்தரவின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் உட்பட, மொத்தம் 1400 பேர் பணியமர்த்தப்பட்டு மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பில் மாவட்டம் முழுவதும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாவட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 34 இருசக்கரம், மற்றும் 43 நான்கு சக்கர வாகனங்களில் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டும், 54 இடங்களில் சுழற்சி முறையில் வாகன சோதனை மேற்கொண்டும், குற்றம் நடவாமல் தடுப்பதற்கும், குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான கடைவீதி, மற்றும் ஆலயங்களுக்கு வரும்போது விழிப்புடன் செயல்பட்டு சந்தேகப்படும் நபர்கள் மீது காவல்துறையினரிடம் தகவல் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்