மதுரை : மதுரை அமெரிக்கன் கல்லூரியின் சமூகப் பணித்துறை மற்றும் மதுரை தீயணைப்பு மீட்பு சேவை நிலையமும் இணைந்து கல்லூரி வளாகத்தில் தீ தடுப்பு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை, நடத்தியது. நிகழ்ச்சிக்கு மதுரை மாவட்ட தீயணைப்பு மற்றும் பாதுகாப்புத் துறை பொன் திருமுருகன் தலைமை தாங்கினார். அமெரிக்க கல்லூரி சமூகப் பணித்துறை ஆசிரியர்கள், அமெரிக்கன் கல்லூரி எம்.எஸ்.டபுள்யூ மாணவர்கள், மாணவிகள், என்.சி.சி மற்றும் ஆர்.பி.எஸ் துறை மாணவ மாணவிகள் பங்கேற்றனர். தீயணைப்பு துறை வீரர்கள் குழுவினர் மாணவ மாணவிகள் மத்தியில் தீத்தடுப்பு பாதுகாப்பு குறித்த கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர். மாவட்ட தீயணைப்பு உதவி அலுவலர் பொன் திருமுருகன் கலந்துகொண்டு, தீயின் வகைகளையும், தீ விபத்து எவ்வாறு ஏற்படுகிறது, தீயில் இருந்து எப்படி பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து விளக்கிக்கூறினார்.
மேலும் அவசர காலத்தில் தீயை எவ்வாறு அணைப்பது? தீயில் சிக்கியவர்களை எவ்வாறு காப்பாற்றுவது? தீ விபத்தில் உடைமைகளையும் உயிர்களையும் எவ்வாறு மீட்பது? போன்ற செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, தீ பாதுகாப்பு தொடர்பாக மாணவிகள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். மேலும் தீ விபத்து ஏற்படும்போது தீயை எவ்வாறு அணைக்க வேண்டும் என்பது குறித்த செயல்முறை விளக்கங்களை தீயணைப்பு துறையினர் செய்து காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து
கொண்டு பயன் பெற்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி