தென்காசி : தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.S.மாதவன, தலைமையில் காவல் ஆளிநர்கள், அமைச்சுப் பணியாளர்கள் தீண்டாமையை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழி கீழ்க்கண்டவாறு எடுத்துக் கொண்டனர். உறுதிமொழியில் “இந்திய அரசியலமைப்பின்பால் இடைவிடாத உளமார்ந்த பற்றுள்ள இந்திய குடிமகன்/குடிமகன் ஆகிய நான் நமது அரசியலமைப்பின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது என்பதை அறிவேன்.
தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு எவர் மீதும் தெரிந்தோ, தெரியாமலோ சமூக வேற்றுமையை மனம், வாக்கு, செயல் என்ற எந்த வகையிலும் கடைபிடிக்க மாட்டேன் என்று இதனால் உளமாற உறுதியளிக்கின்றேன். அரசியலமைப்பின் அடிப்படை கருத்திற்கிணங்க சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும் உண்மையுடனும் பணியாற்றுவது எனது கடமையாகும் என்பதையும் உணர்வேன். இந்திய அரசியலமைப்பின்பால் எனக்குள்ள முழுபற்றிற்கு இது என்றென்றும் எடுத்துக்காட்டாக விளங்கும் என்றும் இதனால் உளமாற உறுதியளிக்கிறேன் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















