சென்னை : புழல் அடுத்த காவாங்கரை, கண்ணப்பசாமி நகர், நான்காவது தெருவைச் சேர்ந்த சேவியர், (64), இவரது மனைவி தேவகி, (58), இவர்களது மகன் மாரி, (35), மகள் ராணி, (32). கடந்த 5ம் தேதி இரவு இவர்களுக்குள், குடும்ப பிரச்னை ஏற்பட்டது. அதனால் மகள் ராணி, ‘நாம் யாரும் உயிருடன், இருக்க வேண்டாம்’ என கூறி, தன் அம்மா, அண்ணன், அப்பா மற்றும் தன் மீதும் மண்ணெண்ணெய், ஊற்றி தீக்குளிக்க முயன்றார். பின், குடும்பத்தினர் அவரை சமாதானப்படுத்தினர்.
குடும்ப நிலையை எண்ணி மனமுடைந்த, தாய் தேவகி, தன் மீது தீ வைத்துக் கொண்டார். அவரை காப்பாற்ற முயன்ற மகன் மாரி, மகள் ராணி ஆகியோர், தீக்காயம் அடைந்தனர். மூவரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில், குடும்பத்தினரை தற்கொலைக்கு, துாண்டியதாக, புழல், காவல் துறையிடம், 6ம் தேதி ராணியை கைது செய்தனர். இந்நிலையில், 7ம் தேதி இரவு தேவகி உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து, 8ம் தேதி நள்ளிரவு, மகன் மாரியும் உயிரிழந்தார். இது குறித்து, புழல் காவல் துறையினர், விசாரிக்கின்றனர்.