சென்னை : சென்னையை அடுத்த பெரியார் நகரை சேர்ந்த, தி.மு.க. வட்ட செயலாளரான செல்வம் (37), கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி கூலிப்படையால் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பரங்கிமலை காவல் துணை ஆணையர் மடிப்பாக்கம் , காவல் உதவி ஆணையர் திரு. ரூபன், தலைமையிலான தனிப்படையினர் கூலிப்படையை சேர்ந்த விக்னேஷ், புவனேஸ்வர் ,கிஷோர் மற்றொரு விக்னேஷ், சஞ்சய் ஆகிய 5 பேரை விக்கிரவாண்டி சுங்கசாவடியில் கைது செய்தனர்.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த, கூலிப்படை தலைவன் முருகேசன், பிரபல ரவுடி முத்துசரவணன் ,என இந்த வழக்கில் மொத்தம்ர 9 பேர் கைது செய்யப்பட்டனர். முதல் கட்ட விசாரணையில் மடிப்பாக்கத்தில் இருந்த நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக செல்வம் கொலை செய்யப்பட்டதாக தெரியவந்தது.
இந்த நிலையில் தி.மு.க. வட்ட செயலாளர் செல்வம், கொலை வழக்கில் திடீர் திருப்பமாக அவருடன் இருந்த, 188-வது வட்ட தி.மு.க. துணை செயலாளர் குட்டி என்ற உமா மகேஸ்வரன் (43), இ தி.மு.க. வட்ட மீனவரணி அமைப்பாளர் சகாய டென்சி (55), மடிப்பாக்கம் பத்திரப்பதிவு எழுத்தாளர் ஜெயமுருகன் (42) , மடிப்பாக்கத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் தரகரும், புரட்சி பாரதம் கட்சி நிர்வாகியுமான ரவி, என்ற ரமேஷ் (39), மேலும் 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.