திண்டுக்கல் : காமலாபுரத்தில் இருந்து ஒட்டன்சத்திரம் வரை நெடுஞ்சாலை பணிக்காக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று கதிரேசன் என்பவர் ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட தெத்துப்பட்டி குளத்தில் கிராவல் மண் எடுத்து உள்ளார் அங்கு வந்த திண்டுக்கல் தி.மு.க கிழக்கு மாவட்ட பொருளாளர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட மூவர் கிராவல் மண்ணை எடுக்கக் கூடாது என தகராறு செய்துள்ளனர். கன்னிவாடி காவல் நிலையத்தில் கதிரேசன் கொடுத்த புகாரின் அடிப்படையில் சத்தியமூர்த்தி உள்ளிட்ட மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா