திருச்சி: (30.07.2025) முதல் (04.08.2025) வரை சென்னை ஊனமாஞ்சேரியில் நடைபெற்ற 69-ஆம் ஆண்டு காவல்துறை திறனாய்வு போட்டியில் திருச்சி மாவட்ட காவல்துறை சார்பாக கலந்து கொண்டு பதக்கங்கள் வென்ற காவலர்கள் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களிடம் பாராட்டு பெற்றனர்.