மதுரை: வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு , தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர். பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தலைமையில் மதுரை சித்திரை பெருவிழா-2025 முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது . மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா , மதுரை மாநகர காவல் ஆணையாளர் லோகநாதன், மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன், அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் அறங்காவலர் ருக்மணி பழனிவேல்ராஜன் ஆகியோர் உடன் உள்ளனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி