தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தேரிக்குடியிருப்பு ஸ்ரீ கற்குவேல் அய்யனார் கோவில் கள்ளர் வெட்டு திருவிழா (15.12.2024) நடைபெற்று வருகின்றது. இதனையடுத்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் (15.12.2024) தேரிக்குடியிருப்பு பகுதிக்கு நேரில் சென்று கற்குவேல் அய்யனார் கோவில் வளாகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போலீசாரின் பாதுகாப்பு பணிகள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு, காவல்துறை அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினர். இந்நிகழ்வின் போது தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. ஆறுமுகம், திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. மகேஷ்குமார், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ராமகிருஷ்ணன் உட்பட காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.