விருதுநகர் : திருவல்லிபுத்தூரில் உள்ள ஸ்ரீஆண்டாள் கோவிலில், ஆடிப்பூரம் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ‘சயன சேவை’ நிகழ்ச்சி நேற்றிரவு நடைபெற்றது. ஸ்ரீஆண்டாள் கோவிலைச் சேர்ந்த கிருஷ்ணன் கோவிலில், சயன சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில் மண்டபத்தில் சர்வ அலங்காரத்தில் ஸ்ரீஆண்டாள் வீற்றிருக்க, ஸ்ரீஆண்டாள் மடியில் ஸ்ரீரெங்கமன்னார் சுவாமிகள் சயனித்திருக்கும் சயன சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. ‘சயன சேவை’ நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஆடிப்பூரம் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான ‘ஆடிப்பூரத் தேரோட்டம்’ நாளை காலை நடைபெற உள்ளது. தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்து வருகிறது.
ஆடிப்பூரம், பஞ்சமி விழா மதுரை மேலமடை தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்யா விநாயகர் ஆலயத்தில், ஜூலை 22-ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு வளர்பிறை பஞ்சமியையொட்டி, கோயிலில் வடக்கு திசையில் அமைந்துள்ள வராஹியம்மன் சன்னதியில், சிறப்பு ஹோமமும், அதைத்தொடர்ந்து வராஹி, துர்க்கை, மீனாட்சி, மகாலட்சுமி ஆகியோருக்கு வளையல் காப்பு, சிறப்பு அர்ச்சனைகள் நடைபெறும்.
இதற்கான ஏற்பாடுகளை, ஆலய நிர்வாகிகள் மற்றும் மகளிர் அமைப்பினர் செய்து வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி