சென்னை : நடுக்குப்பம் பகுதியில் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட, நெருங்கிய நண்பர்களான மீனவர்கள், சதீஷ்குமார் (27), அருண் (22) , தினேஷ் (22), ஆகிய 3 பேரும் கலந்து கொண்டனர். மூவரும் மது அருந்திவிட்டு இருந்ததாகத் தெரிகிறது, நிகழ்ச்சியில் உணவு பரிமாறப்பட்டது. அருண் விளையாட்டாக நடந்ததில் ஆத்திரமடைந்த தினேஷ், அருணை ஆபாச வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளார். சண்டையை விளக்க வந்த பாபுவையும், அவரை தாக்கியதாக தெரிகிறது. இதில் அருணும், பாபுவும் ஒன்று சேர்ந்து தினேஷை தாக்கியுள்ளனர். இந்த நிலையில் இரவில் அருணும், பாபுவும், நடுக்குப்பம் கடற்கரை பகுதியில் பேசிக் கொண்டிருந்தனர், அப்போது தினேஷ், கையில் மின்வெட்டும் கத்தியுடன் ஆவேசமாக வந்து அருணையும் பாபுவையும் சரமாரியாக தாக்கினார்.
பயத்துடன் ஓடிய 2 பேரையும் கொலைவெறியுடன் ஓட ,ஓட விரட்டி சென்று குத்தியுள்ளார். இரண்டு பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். தினேஷ், அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார், ரத்த வெள்ளத்தில் இருந்த, இரண்டு பேரையும் ஊர் மக்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இரண்டு பேரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதில் அந்த பகுதியில் பெரும் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. திருவான்மியூர் காவலர், வழக்குப்பதிவு செய்து தினேஷ், கைது செய்யப்பட்டார். இதையடுத்து காவலர்கள் அதிக அளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.