திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் பிப்ரவரி 10ம் தேதி வரும் 26ம் தேதி வரை காஞ்சி, செங்கல்பட்டு, கள்ள குறிச்சி, சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளவர்கள் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம். இந்த முகாமில் ராணுவத்தில் காலியாக இருக்கும் செவிலியர், எழுத்தர், பொருட்கள் பாதுகாவலர் பணிக்கு தேர்வு நடக்க இருக்கிறது, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடக்க இருந்த தேர்வு நோய் தொற்று காரணமாக தற்போது நடக்கிறது.
இதற்கு முன் தேர்விற்கு விண்ணப்பித்த நபர்கள் மட்டுமே இந்த தேர்வில் கலந்து கொள்ள முடியும். இதற்கான நுழைவு தேர்வு வரும் ஜனவரி 25ம் தேதி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியில் ஆட்கள் தேர்வு நடக்க உள்ளது. நுழைவு சீட்டில் விண்ணப்பதாரர் கலந்து கொள்ளும் இடம் மற்றும் தேதி குறித்து தகவல் இருக்கும். ஒரே நாளில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு நாள் ஒன்றுக்கு 500 பேர் மட்டுமே கலந்து கொள்ள ஏற்பாடு செய்து உள்ளது.
மேலும் இது குறித்த தகவல்களுக்கு 044-25674924, 044-25674925 என்ற எண்ணில்சென்னை ராணுவ அலுவலகத்தினை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். நேர்மையான முறையில் மட்டுமே இந்த தேர்வு நடக்க உள்ளதால் யாரும் இடை தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று பத்திரிகை தகவல் மையம் சார்பில் தெரிவிக்கபட்டு உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்
திரு.தாமோதரன்