திருவண்ணாமலை : திருவண்ணாமலை, கீழ்நாத்தூர், தவசிகுளத்தை சேர்ந்த வேலு மகன் தீபன், வயது 24 என்பவர் கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகளில் தலைமறைவாக இருந்த வந்த நபரை திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு.D.விநாயகமூர்த்தி மற்றும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேற்கண்ட நபரின் சட்டவிரோத செயலை கட்டுப்படுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.M.R.சிபிசக்கரவர்த்தி,IPS., அவர்களின் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் திரு.K.S.கந்தசாமி,IAS., அவர்கள் மேற்கண்ட நபரை குண்டர் தடுப்புச் சட்டத்தின்படி கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் சீரிய தலைமையின் கீழ் மாவட்டத்தில் இந்த ஆண்டில் மட்டும் 53 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின்படி கைது செய்யப்பட்டுள்ளனர்.