திருவண்ணாமலை : திருவண்ணாமலை நகரம் , தேனிமலை மாரியம்மன் கோவில் தெருவை, சேர்ந்த விக்கி (22), ஜெய்சங்கர், தேனிமலை தென்னமர தெருவை சேர்ந்த ஷாமா (40), ராம்ஜானி, திருவண்ணாமலை நகரம் அண்ணா நகர் 7 வது ,தெருவை சேர்ந்த மோசஸ் (40 ) ,சுப்பிரமணி அண்ணா நகர் 9வது தெரு சேர்ந்த மதி (23), உலகநாதன் தேனிமலை, தென்னமர தெருவை சேர்ந்த சையது முகமது( 25), ராம்ஜானி, ஆகிய 5 பேரும் கொலையில், ஈடுபட்ட குற்றத்திற்காக திருவண்ணாமலை, குற்றப்பிரிவு காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. ந. கோமளவல்லி, அவர்கள் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார். திருவண்ணாமலை வட்டம் பழைய மல்லவாடி காலனி, அம்பேத்கர் தெருவை சேர்ந்த ராமராஜன் (31), என்பவர் தனது வீட்டின் பின்புறம் கள்ளச் சாராய விற்பனையில் ஈடுபட்ட குற்றத்திற்காக , திருவண்ணாமலை தாலுகா காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.அ ஹேமமாலினி, அவர்கள் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தா.
திருவண்ணாமலை மாவட்டம் , ஆரணி நகரம் ஷரப்பஜார், பகுதியை சேர்ந்த சிவா (23 ) ரமேஷ் என்பவர் வாழைப்பந்தல் ஆரணி ரோடு பையூர், பாறை குளத்தின் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட குற்றத்திற்காக ஆரணி கிராமிய காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.பி. புகழ், அவர்கள் வழக்குப் பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுக்கா தண்டையான் கோட்டை, கிராமத்தை சேர்ந்த சங்கர் சங்கர்( 25), துரைசாமி என்பவர் கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றத்திற்காக கண்ணமங்கலம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. ஜி சாலமோன் ராஜா, அவர்கள் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார்.
காஞ்சிபுரம் வட்டம் , திருக்காளிமேடு கிராமத்தை சேர்ந்த கணபதி ரவி, காஞ்சிபுரம் மாவட்டம் முத்தியால்பேட்டை சேர்ந்த சங்கர், காஞ்சிபுரம் மாவட்டம் பழைய ரயில்வே நிலையம், பெரியார் தெருவை சேர்ந்த தாமோதரன் சண்முகம் ஆகிய மூவரும் தூக்கி பேருந்து நிலையம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட குற்றத்திற்காக தூசி காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. அ. அண்ணாதுரை , அவர்கள் வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார் மேற்கண்ட நபர்கள் தொடர்ந்து சட்டவிரோத, செயலில் ஈடுபடுவதை தடுப்பதற்காக குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அ. பவன் குமார் இ.கா.ப, அவர்களின் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார் மாவட்ட ஆட்சியர் திரு .பா. முருகேஷ் இ.ஆ.ப, அவர்கள் மேற்கண்ட நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் குண்டர் தடுப்பு காவல், சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கஉத்தரவிட்டார்.
xதிருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்