அரியலூர் : அரியலூர் மாவட்டம் திருமானூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரசு மதுபான பாரில் குற்றவாளிகள் வடுகபாளையம் கிராமத்தை சேர்ந்த கபாஸ்கர் (30). ரமேஷ் (25). மற்றும் திருவங்கனூர் கிராமத்தைச் சேர்ந்த பாரதி (32). ஆகிய மூவரும் புகார்தாரையும் அவரது நண்பர்களையும் அதிகமாக திட்டியும் பாட்டிலால் அடித்தும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து குற்றவாளி கபாஸ்கரின் நண்பரை விழுப்பனங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த சக்திவேல் (34). கார்த்தி (27). முருகானந்தம் (31). ஆகிய மூவரும் கபாஸ்கர் எங்கே என்று விசாரித்து அசிங்கமாக திட்டி அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இச்சம்பவங்கள் குறித்து திருமானூர் காவல் நிலையத்தில் இரண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட 1. கபாஸ்கர் குற்ற சரித்திர பதிவேடு குற்றவாளி 2.பாரதி 3.சக்திவேல் 4. கார்த்தி 5. முருகானந்தம் ஆகியவை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தனர் தலைமறைவாக உள்ள குற்றவாளி ரமேஷ் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.