திருநெல்வேலி : திருநெல்வேலி பேட்டை திருத்து சாலை பகுதியைச் சேர்ந்தவர் சூசை அந்தோணி ராஜ். இவா், கடந்த 5-ஆம் தேதி வண்ணார்பேட்டையில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தனது மகன் ஸ்னோவின் அண்டோ(4). உள்பட குடும்பத்தினருடன் சென்றுள்ளார். நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்கு புறப்பட்டபோது சிறுவனின் கழுத்தில் கிடந்த 1 பவுன் தங்கச்சங்கிலி காணவில்லை என தெரியவந்துள்ளது.
இது குறித்து அந்தோணி ராஜ் பாளையங்கோட்டை காவல் நிலைய குற்ற பிரிவில் புகார் அளித்தார். அதன் பேரில், வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டதில் மேலப்பாளையம் பங்காளப்பா 4-ஆவது தெருவைச் சேர்ந்த முபாரக்(45). என்பவர் திருடியது தெரிய வந்தது. அவரை குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்து நகையை மீட்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்