திருச்சி : திருச்சி லால்குடி பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார்(29). போலீஸ்காரரான இவர் மணிகண்டம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் பணி முடிந்து அவர் வீடு திரும்பி கொண்டிருந்தார். லால்குடி சாலை தாளக்குடி அருகே அகிலாண்டபுரம் என்ற பகுதியில் அவர் தனது பல்சர் பைக்கில் சென்று கொண்டிருந்த போது, ஆட்டோ ஒன்று குறுக்கே வந்துள்ளது. இதில் ஆட்டோவின் மீது மோதி துாக்கி வீசப்பட்ட அவர் இரும்பு கம்பியில் மோதி உள்ளார். இதில் அவர் அணிந்திருந்த ஹெல்மெட் இரண்டாக பிளந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இவர் உடனடியாக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டாலும், பயனின்றி உயிரிழந்தார். இது குறித்து சமயபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த ரஞ்சித்குமாருக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு. நிஷாந்த்