மதுரை: சட்டமன்றத் தேர்தல் – 2026 ஐ முன்னிட்டு 100% வாக்குப்பதிவை வலியுறுத்தியும், பொதுமக்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாக்களிக்க வேண்டும் என்பதையும் விளக்குவதற்காக மதுரை மாவட்ட காவல் துறை சார்பில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் (22.03.2026) திருமங்கலம் உட்கோட்டம் கள்ளிக்குடி அரசு மருத்துவமனையில் இருந்து தொடங்கிய இந்த அணிவகுப்பு ஒடியப்பட்டி, மலைப்பட்டி, குறையூர் பஸ் ஸ்டாப் கிழக்கு மற்றும் மேற்கு தெருக்கள் வழியாக நடைபெற்றது. இந்த அணிவகுப்பில் காவல் உதவி கண்காணிப்பாளர் (ASP), காவல் ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் மத்திய சேம காவல் படையினர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
















