மதுரை : மதுரை மாவட்டம் திருமங்கலம் உட்கோட்டம், திருமங்கலம் (PEW UNIT) நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததாக கிடைத்த தகவலின் பேரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். அதில் 1) மணிகண்டன் (49). 2) சகிலா (48). 3) அஞ்சனா பேகம் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து மொத்தம் 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் தொடர்பான தகவல்களை 91760-79100 என்ற எண்ணிற்கு பொதுமக்கள் தெரிவிக்கலாம். அதன் பேரில் காவல்துறையினர் தக்க சட்ட நடவடிக்கை மேற்கொள்வதோடு, தகவல் அளிப்போரின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
















