மதுரை : மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அர்விந்த், இ.கா.ப., அவர்கள் திருமங்கலம் உட்கோட்டம் ஆவல் சூரன்பட்டி சோதனைச் சாவடிக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது பாதுகாப்பு ஏற்பாடுகள், வாகன சோதனை நடைமுறைகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பான செயல்பாடுகளை விரிவாக பார்வையிட்டார். மேலும், பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு விழிப்புணர்வுடன், பொறுப்புணர்ச்சியுடன் கடமையாற்ற வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி முக்கிய அறிவுரைகளையும் வழங்கினார்.
















