மதுரை: சட்டமன்றத் தேர்தல் 2026ல் 100% வாக்கு பதிவை வலியுறுத்தியும், பொதுமக்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மதுரை மாவட்ட காவல் சார்பில் (27.03.2026) திருமங்கலம் பகுதியில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் படி, கூடகோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருமால் மேற்கு வீதி, மந்தை மற்றும் தும்பாக்குளம் பேருந்து நிலையம் கிழக்கு வீதி வழியாக இந்த அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பில் காவல் ஆய்வாளர்கள், போலீசார் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
















