ஊர்க்காவல் படையில் சேர விரும்புவோருக்கான ஒரு அரிய வாய்ப்பு.
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் மண்டல தளபதி மற்றும் மண்டல துணை தளபதி பதவிகளுக்கு பணி நியமனம் செய்யப்பட உள்ளது பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுடைய நபர்கள் தங்களை பற்றிய விபரப்பட்டியலும் அனுபவம் பற்றிய விபரத்துடன் 1.11.2021 குள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை சந்தித்து விண்ணப்பிக்கலாம்
மேலும் திருப்பூர் மாவட்ட காவல்துறைக்கு உதவியாக ஊர்க்காவல் படையில் தன்னார்வமாக கோயில் மற்றும் இதரப் பாதுகாப்பு பணியில் தங்களுடைய ஓய்வு நேரத்தில் சேவை செய்ய தகுதியுள்ளோர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 20 வயது முதல் 45 வயதுக்குள்ளான உடற்தகுதி உடைய ஆண் பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
இதற்கான விண்ணப்பங்கள் அவினாசி பல்லடம் காங்கேயம் தாராபுரம் மற்றும் உடுமலைப்பேட்டை ஆகிய உட்கோட்டங்களில் உள்ள ஊர்காவல்படை அலுவலகங்களில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்வி தகுதிக்கான மாற்றுச்சான்றிதழ் மதிப்பெண் பட்டியல் ஆதார் அட்டை நகல் மற்றும் குடும்ப அட்டை நகல் இணைக்கப்பட வேண்டும் திருப்பூர் மாவட்ட காவல் துறையின் கீழ் உள்ள காவல் நிலைய எல்லையில் குடியிருப்போர் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட காவல் அலுவலகத்தில் செயற்பட்டுவரும் ஊர்க்காவல் படை அலுவலகத்திலோ அல்லது சம்பந்தப்பட்ட உற்கோட்டங்களில் உள்ள ஊர் காவல் படை அலுவலகங்களிலோ நவம்பர் 1ஆம் தேதி மாலை 5 மணி வரை ( 1.11.2021) சமர்பிக்கப்பட வேண்டும்.
விண்ணப்பத்தின் அடிப்படையில் உடற்தகுதி தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியுள்ளோர் தேர்வு செய்யப்படுவர் அரசு பணியாளர்கள் அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணி புரிவோரும் விண்ணப்பிக்கலாம்.
அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மது விற்பனை செய்து 8 பேர் மீது வழக்கு.
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கோ.சசாங் சாய் இ.கா.ப அவர்களின் உத்தரவுப்படி சட்டவிரோதமாக அரசு அனுமதியின்றி மது கள்ளச்சாராயம் மற்றும் கள் விற்பனையை தடுக்கும் பொருட்டு போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று (06.10.2021) மாவட்டம் முழுவதும் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்ட எட்டு நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது அவர்களிடமிருந்து 33 தமிழ்நாட்டு மதுபான பாட்டில்கள் மற்றும் பணம் ரூபாய் 2382 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
செல்போனை திருடியவர் கைது செய்து சிறையில் அடைப்பு.
திருப்பூர்: கணியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மடத்துக்குளம் மெயின் ரோடு பகுதியில் அதே பகுதியை சேர்ந்த முஜிபூர் ரஹ்மான் என்பவர் சுந்தூஸ் என்ற பெயரில் துணிக்கடை வைத்து நடத்தி வருகிறார் இன்று வழக்கம் போல் கடையை வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது.
கடைக்கு வந்த நபர் ஒரு உள்ளாடை எடுத்துவிட்டு ரூபாய் 150 பணத்தை கொடுத்துவிட்டு செல்லும்போது மேஜையின் மீது வைத்திருந்த சுமார் 15 ஆயிரம் மதிப்புள்ள உரிமையாளரின் செல்போனை எடுத்துக் கொண்டு ஓட என்னியவரை உரிமையாளர் சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள் அந்த நபரை பிடித்து பார்த்தபோது அவரது பாக்கெட்டில் துணிக்கடை உரிமையாளரின் செல்போன் இருந்துள்ளது.
விசாரித்தபோது அந்த நபர் அதே பகுதியை சேர்ந்த நாச்சிமுத்து என்பவரது மகன் ரஞ்சித்குமார் 28. என்று கூறியுள்ளார்.
முஜிபூர் ரஹ்மான் மற்றும் திருடப்பட்ட சொத்துக்களுடன் கணியூர் காவல் நிலையம் வந்து புகார் கொடுத்தார் புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மேற்படி நபரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.
அரசால் தடை செய்யப்பட்ட குட்காவை விற்பனைக்காக வைத்திருந்த 9 நபர்கள் கைது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கோ.சசாங் சாய் இ.கா.ப அவர்களின் உத்தரவுப்படி மாவட்டம் முழுவதும் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அதிரடி சோதனையில் ஈடுபட்டு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த 9 நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கொலை மிரட்டல் விடுத்த தம்பி கைது செய்து சிறையில் அடைப்பு.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் வேலம்பாளையம் சத்தியா நகர் பகுதியில் வசித்து வரும் சீரங்கன் என்பவரது மகன் சாமுவேல் 39 என்பவர் வசித்து வருகிறார்.
சாமுவேலும் காங்கயம் சத்யா நகரை சேர்ந்த மணி என்பவரின் மகள் ரேணுகாவும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் இருவருக்கும் தற்போது வரை குழந்தை இல்லை.
இந்நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ரேணுகா சாமுவேலை பிரிந்து தனது தந்தை வீட்டில் வசித்துக் கொண்டு கணவரிடம் விவாகரத்து கேட்டு காங்கேயம் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது.
கடந்த 4.10.2021 அன்று இந்நிலையில் ரேணுகாவின் வீட்டிற்கு சென்று சாமுவேல் ரேணுகாவின் தாய் தேவியிடம் தனது மனைவியை குடும்பம் நடத்த தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளார்.
அப்போது அங்கு வந்த ரேணுகாவின் தம்பி லோகநாதன் சாமுவேலை கெட்டவார்த்தையால் திட்டி அருகில் கிடந்த தடியால் சாமுவேலை தலையில் தாக்கி காயப்படுத்தி இனி இங்கு வந்தால் உன்னை கொன்று விடுவேன் என மிரட்டியுள்ளார்.
தலையில் ரத்த காயத்துடன் காங்கயம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை மேற்கொண்டு பின் மேல்சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக இருந்தவரிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து காங்கேயம் போலீசார் இன்று லோகநாதனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.