திருப்பூர்: தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பிரபு (29) கடந்த 6 ஆண்டுகளாக தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் திருப்பூர் புதுப்பாளையம் பகுதியில் வசித்துவருகிறார். அதே பகுதியில் வேலை செய்து வரும் பிரபு வீட்டு அருகில் உள்ள 14 வயது சிறுமிக்கு கடந்த 9 மாதங்களாக காதலிப்பதாக அந்த சிறுமியை ஏமாற்றி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே இரண்டு நாட்கள் முன்பு அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி கடத்தி சென்றதாகவும் கூறப்படுகிறது. சிறுமியின் பெற்றோர் பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்ததின்.பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து திருமுருகன் பூண்டி போலீசார் தருமபுரி சென்று அந்த சிறுமியை மீட்டும் பிரபுவை கைது செய்ததோடு, பிரவுவை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.