திருப்பத்தூர் : திருப்பத்தூர் தமிழக முழுவதும் குற்றம் சம்பவங்களை தடுக்கும் விதமாக E-Beat (Smart Kavalar APP) எனும் செயலியை (15.10.2022) ம் தேதி தமிழக காவல் துறை இயக்குநர் முனைவர்.C. சைலேந்திரபாபு.,IPS, அவர்களால் அறிமுகபடுத்தப்பட்டது. இதனை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.K.S.பாலகிருஷ்ணன்.,BVSc, அவர்கள் இன்று (15/11/2022) மாவட்டத்தில் E-Beat (Smart Kavalar App) செயலியை அறிமுகப்படுத்தினார்கள்.
மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.புஷ்பராஜ், அவர்களின் மேற்பார்வையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது.
மாவட்டத்தில் உள்ள மூன்று உட்கோட்டங்களில் உள்ள நகர காவல் நிலையங்கள் 1.திருப்பத்தூர் நகர காவல் நிலையம், 2. வாணியம்பாடி நகர காவல் நிலையம் மற்றும் 3.ஆம்பூர் நகர காவல் நிலையம் ஆகியவற்றில் தற்போது முன்மாதிரியாக E-Beat செயலியின் மூலம் பணி நியமிக்கப்பட்டு இயங்கி வருகிறது. E-Beat செயலியின் மூலம் வங்கிகள், வங்கி ATM, பூட்டிய வீடுகள், தனியாக உள்ள வயது முதிர்ந்த நபர்களை பகல் மற்றும் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் மூலம் துள்ளியமாக கண்காணிக்கும் வகையில் அந்தந்த இடத்திற்கு நேரில் சென்று புகைப்படமாகவோ, ஆடியோ பதிவேற்றமாகவோ பதிவு செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த செயலியின் மூலம் கெட்ட நடத்தைக்காரர்களின் நடத்தையை கண்காணிக்கும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செய்வதின் மூலம் மாவட்டத்தில் குற்ற சம்பங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் வாகன தணிக்கையின் போது சந்தேகப்படும் நபர்கள் மற்றும் வாகனங்களை E-Beat செயலியின் மூலம் சோதனை செய்து விவரங்களை பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகள் தங்கள் காவல் நிலையத்தில் உள்ள காவல் ஆளினர்களுக்கு அன்றாடம் ஒதுக்கப்படுகின்ற பணிகளை இந்த செயலியின் மூலம் பதிவு செய்யப்படுகிறது. அதன் விவரங்களை வாரங்கள், மாதங்களாகளோ அந்தந்த காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனித்தனியாக பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.