திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 7 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 4 இரு சக்கர வாகனங்கள் ஆக மொத்தம் 11 வாகனங்கள் எந்த நிலையில் உள்ளதோ அதை நிலையில் வருகின்ற 02.02.2022-ம் தேதி காலை 10 மணிக்கு திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பொது ஏலத்தில் விடப்படும் என்று அறிவிக்கப்படுகிறது.
ஏலம் எடுக்க விரும்புவோர் 01.02.2022-ம் தேதி காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை மோட்டார் வாகன பிரிவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பார்வையிட்டுக் கொள்ளலாம். மேலும் வாகனங்களை ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் அன்றே ஒரு இரு சக்கர வாகனத்திற்கு ரூ.1000/- மற்றும் ஒரு நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ.2000/- முன் பணம் செலுத்தி தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளுதல் வேண்டும்.
ஏலம் எடுத்தவுடன் முழுத்தொகை மற்றும் அதற்குண்டான சரக்கு மற்றும் சேவை வரி (இரு சக்கர வாகனத்திற்கு 12% மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு 18%)முழுவதையும் அரசுக்கு அன்று ரொக்கமாக செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் நிச்சயமாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்.