திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட தனிப்பிரிவில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகளை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நை. சிலம்பரசன் அவர்கள் வெகுவாக பாராட்டி, நற்சான்றிதழ்களை வழங்கினார். இந்த நிகழ்வின்போது, காவல் அதிகாரிகள் மேற்கொண்ட சிறப்பான பணிகள் மற்றும் அர்ப்பணிப்பை அவர் பாராட்டி, இது போன்ற சிறப்பான சேவை பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் காவல்துறையின் நற்பெயரை மேலும் உயர்த்தும் என தெரிவித்தார். மேலும், எதிர்காலத்திலும் இதே உற்சாகத்துடன் பணியாற்ற வேண்டும் என ஊக்கமளித்தார். இந்த நிகழ்ச்சியில் காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் காவல் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
















