திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது FAKE TRANSACTION FRAUD என்ற புது வகை மோசடி நடைபெற்று வருகிறது. அதன்படி டோர் டெலிவரி செய்யும் அனைத்து கடைகளின் விளம்பரங்களில் இருந்தும் இணையதளத்தில் இருந்தும் மொபைல் எண்களை எடுத்து அறிமுகமில்லாத எண்ணிலிருந்து அவர்களை தொடர்பு கொண்டு பொருட்கள் order செய்ய வேண்டும் எனக் கூறி, உதாரணமாக ரூ.1,932/-மதிப்பிற்கு என குறைந்த தொகையில் பொருட்கள் order செய்துவிட்டு அதற்கான தொகையை PHONEPE APP மூலமாக அனுப்பி விடுவதாக கூறிவிட்டு order செய்த பொருளை பிறகு நேரில் வந்து பெற்றுக் கொள்வதாகவும் கூறி விட்டு சிறிது நேரத்தில் மீண்டும் அவர்களை தொடர்பு கொண்டு தான் order செய்த பொருள்களுக்கு ரூ.1, 932/- பதிலாக ரூ.19,322/- என பணத்தை மாற்றி அனுப்பி விட்டதாக கூறி PHONEPE APP -ல் பணம் அனுப்பியது போல போலியான transaction screenshot -ஐ whatsapp மூலமாக அனுப்பிவிட்டு பொருட்கள் order செய்த தொகையை தவிர்த்து மீதி தொகையை அனுப்புமாறு கூறி நம்ப வைத்து பண மோசடி செய்து ஏமாற்றி வருகின்றனர்.
எனவே அறிமுகம் இல்லாத எண்களிலிருந்து உங்களது நிறுவனம் (அ) கடைகளில் மொபைல் மூலமாக ஆர்டர் செய்யும் நபர்களின் அழைப்புகளை தவிர்க்க வேண்டும். இவ்வாறு பணம் அனுப்பியதற்கான transaction screenshot -களை நம்பாமல் உங்களது வங்கிக் கணக்கில் பணம் credit ஆகி இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இது போன்ற பண மோசடி நடைபெற்றால் சைபர் கிரைம் இணையதளத்தில் cybercrime.gov.in அல்லது 1930 எண்ணை தொடர்பு கொண்டு உடனடியாக புகார் பதிவு செய்யுமாறு திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்