திருநெல்வேலி : தமிழக சபாநாயகர் அப்பாவு, திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி பேரூராட்சியின் நீர்த்தேக்க தொட்டி அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சிக்கு வருகை புரிந்தபோது மனு கொடுக்க வந்த பொதுமக்களை அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தி அவமதித்த ஏர்வாடி காவல்துறை ஆய்வாளர், சுதாவின் செயல் கண்டிக்கத்தக்கது என்றும், காவல்துறை கண்காணிப்பாளர் ஏர்வாடி காவல்துறை ஆய்வாளர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். என்றும் எஸ்.டி.பி.ஐ கட்சி நெல்லை புறநகர் மாவட்டம் என்கிற பெயரில் Facebook பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
மேற்கண்ட தகவல் உண்மைக்கு புறம்பானதாகும். சபாநாயகர் ஏர்வாடி பேரூராட்சி நிகழ்ச்சிக்கு வந்திருந்த போது பல்வேறு தரப்பினர் மனு அளிக்க வந்திருந்தனர். சபாநாயகர் மேடையில் பேச தொடங்கியவுடன் வந்த எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த சில பெண்கள் உடனடியாக மனு அளிக்க வேண்டும் என சொன்னதால் பேசி முடித்த பிறகு மனு அளிக்கும்படி பணியில் இருந்த காவல் ஆய்வாளர், சுதா அறிவுறுத்தியுள்ளார். பின்னர் சபாநாயகர் எஸ்.டி.பி.ஐ கட்சியை சேர்ந்தவர்களிடமிருந்து மனுவை பெற்ற பின்னரே கிளம்பியுள்ளார். ஆனால் இதனை மாற்றி தவறான செய்தியை எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை தவறாக புரிந்து கொண்டு ஏர்வாடி காவல் ஆய்வாளர், சுதா மீது தவறான கருத்துக்கள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. மேற்படி தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும் என்பதை மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவித்து கொள்ளப்படுகிறது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்