திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன்,இ.கா.ப., பொது மக்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில் வீட்டின் உரிமையாளரிடம் இருந்து வீட்டை வாடகைக்கோ, அல்லது குத்தகைக்கோ, பெற்று மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் வீட்டின் உரிமையாளர்கள் வீட்டை வாடகைக்கு கொடுக்கும் பொழுது, அந்த வீட்டில் ஒப்பந்தம் செய்த நபர் தான் குடியிருக்கிறார் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். வீட்டை வாடகை அல்லது குத்தகை என்ற பெயரில் ஒப்பந்தத்தின் கீழ் உரிமையாளர்களிடமிருந்து பெற்று கொண்டு, மூன்றாம் நபர்களிடம் பெரும் தொகையைப் பெற்று உரிமையாளருக்குத் தெரியாமல் அதை வாடகைக்கு விடுவதன் மூலம் சொத்துக்களின் உரிமையாளர்களை ஏமாற்றுகிறார்கள்.
வீட்டு உரிமையாளரின் அனுமதி இன்றி குத்தகைக்கு அல்லது வாடகைக்கு பெற்ற நபர் அவ்வீட்டினை உள் வாடகைக்கு கொடுப்பது சட்டப்படி குற்றமாகும் அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்துள்ளார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்