திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் 73-வது குடியரசு தின விழாவானது காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் 26.01.2022-ம் தேதி நடைபெற்றது.
குடியரசு தின விழாவில் காவல்துறை அணிவகுப்பு திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் திரு.சுப்பிரமணியன் அவர்கள் மேற்பார்வையில் மாவட்ட ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திருமதி.மகேஸ்வரி அவர்கள் தலைமையிலான மூன்று படைப்பிரிவுகள் அடங்கிய குழு இடம்பெற்றிருந்தன.
விழாவின் போது திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அவர்கள் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். அப்போது காவல்துறையினரின் மிடுக்கான தோற்றமும், துப்பாக்கி ஏந்திய ஆண் மற்றும் பெண் காவலர்களின் அணிவகுப்பும், காவல்துறையின் இசைக் கலைஞர்களின் இசையும் அனைவரும் பாராட்டும் வகையில் சிறப்பாக இருந்தது.
குடியரசு தினவிழாவில் அனைவரும் பாராட்டும் வகையில் அணிவகுப்பு நடத்திய திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் திரு.சுப்பிரமணியன் அவர்களின் மேற்பார்வையிலான அணிவகுப்பை தலைமையேற்று வழிநடத்தி சென்ற மாவட்ட ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திருமதி.மகேஸ்வரி அவர்களுக்கும், முதல் படைப்பிரிவை வழிநடத்திச் சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.செல்வமுருகன், இரண்டாம் படைப்பிரிவை வழிநடத்திச் சென்ற உதவி ஆய்வாளர் திரு. சௌந்தரராஜன், மூன்றாம் படைப்பிரிவை வழிநடத்திச் சென்ற மாநகர சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. ராமகிருஷ்ணன், திருநெல்வேலி மாநகர இசைக்குழு சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. சுப்பிரமணியன் மற்றும் தலைமைக் காவலர்கள் திரு.கொம்பையா, திரு.சந்திரபாலன், திரு. ஆகாஷ் ஜீவன் ராம், திரு.மாரிசாமி, திரு.பால்வர்ணம், திருமதி.வெரோனிகா, மற்றும் திருமதி. செண்பகலெட்சுமி ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், இ.கா.ப அவர்கள் பாராட்டி கேடயம் வழங்கி கௌரவித்தார். மேலும் காவல்துறை அணிவகுப்பில் கலந்து கொண்ட 71 காவலர்களுக்கும் வெகுமதி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.