திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி உட்கோட்டம், மேலச்செவல் காவல் நிலையம் (22.12.2025) அன்று மாண்புமிகு தமிழக முதல்வரால் காணொளி மூலம் துவக்கி வைக்கப்பட்டு செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப., கலந்து கொண்டு, மேலச்செவல் காவல் நிலையம் செயல்படும் கட்டிடத்தினை திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றி, காவல் நிலையத்தை பார்வையிட்டு பொறுப்பேற்றுக் கொண்ட காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். காவல் நிலையத்தின் முதல் ஆய்வாளராக ரெகு ராஜன் பணியமர்த்தப்பட்டுள்ளார்.
புதிதாக தோன்றியுள்ள காவல் நிலையம் சேரன்மகாதேவி உட்கோட்டத்தில் இயங்கி வரும் முன்னீர்பள்ளம் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதிகளை, பிரித்து உருவாக்கப்பட்ட புதிய காவல் நிலையம் ஆகும். இந்நிகழ்ச்சியில் சேரன்மகாதேவி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அஸ்வத் அன்டோ ஆரோக்கியராஜ், சதீஷ் கண்ணன், துணை காவல் கண்காணிப்பாளர் (பயிற்சி), முன்னீர்பள்ளம் காவல் ஆய்வாளர், வேல்ராஜ், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















