திருநெல்வேலி: தமிழக காவல்துறையில் சிறுதண்டனை பெற்றிருக்கும் காவலர்களுக்கு அவர்களின் தண்டனையை ரத்து செய்வதற்கான ஆணையை கடந்த 13.12.2021 அன்று தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி ஆணை கிடைக்கப் பெற்ற நான்கு நாட்களில் திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலக தண்டனை பிரிவு கண்காணிப்பாளர் திரு.முத்துராஜ், அவர்கள் வழிகாட்டுதலின் படி தண்டனை பிரிவு இளநிலை உதவியாளர் செல்வி.வைதேகி, அவர்கள் விரைந்து செயல்பட்டு காவலர்களின் 105 சிறு தண்டனைகளை ரத்து செய்ய துரிதமாக செயல்பாட்டார்.
மேற்படி இளநிலை உதவியாளரின் பணி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், இ.கா.ப அவர்களின் கவனத்திற்கு வந்ததால் 15.02.2022 இன்று தண்டனை பிரிவு இளநிலை உதவியாளர் செல்வி.வைதேகி அவர்களை பாராட்டி பரிசு வழங்கி ஊக்குவித்தார்.