திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் தாலுகா காவல் நிலைய சரகத்தில் உள்ள மேலபுத்தனேரி கிராமத்தைச் சார்ந்த மாரியம்மாள் என்பவர் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் தனது மகனை அதே ஊரைச் சார்ந்த நபர் ஒருவர் ஆபாச வார்த்தைகள் பேசி அடித்து துன்புறுத்தியதாக புகார் மனு கொடுத்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என சமூக வலைத்தளங்களில் தவறான செய்தி பரப்பப்படுகிறது. மாவட்ட காவல் அலுவலகத்தில் மாரியம்மாள் அளித்துள்ள மனுவினை ஊரக உட்கோட்ட காவல் அலுவலகம் மூலமாக தாலுகா காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்ட நிலையில், மேற்கண்ட விசாரணை தொடர்பாக காவல் நிலையத்திலிருந்து பலமுறை அவரை விசாரணைக்கு அழைத்தும் , அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்துள்ளார்.
புகார் கொடுத்த மனுதாரர் நிலுவையில் இருந்து வரும் இந்த வழக்கு விசாரணைக்கு எந்த ஒரு ஒத்துழைப்பும் வழங்காமல், நடந்த சம்பவம் குறித்து எந்த ஒரு விளக்கமும் அளிக்காத நிலையில், மனுவின் மேல் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற தவறான கருத்துக்கள் சமூக வலைதளத்தில் பரப்பப்பட்டு வரப்படுகிறது. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான சட்டத்திற்கு விரோதமான செயலாகும். திருநெல்வேலி மாவட்டத்தை பொருத்தவரையில், பொதுமக்களிடம் பெறப்படும் புகார் மனுக்களின் மீது காவல்துறை சார்பாக சட்டத்திற்கு உட்பட்டு, உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது. காவல்துறையின் விசாரணை குறித்து பொதுமக்களிடம் தவறான தகவல்களை பரப்பி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கில், செயல்படும் நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவிக்கப்படுகிறது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்