திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பாண்டியன் காலனியைச் சேர்ந்த சுரேஷ் (வயது 24). மீது, தாக்குதல் நடத்திய வள்ளியூர் சந்தன மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ராமையா என்பவரது மகன் கணேசன் ( 42). தனுஷ்கோடி ( 39). மாணிக்கம் ( 26). மற்றும் சுரேந்தர் ( 28). ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இத் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பின் தென் மண்டல இளைஞரணி தலைவர், கணேசனும், தனுஷ்கோடி ஆகிய இருவரும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள். அவர்கள் மீது வள்ளியூர் காவல் நிலையத்தில் பல வழக்குகள் உள்ளன. கைது செய்யப்பட்டுள்ள அவர்களை விடுவிக்க
அவர்கள் பொறுப்பேற்று இருக்கும் அமைப்பிலிருந்து காவல்துறைக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
எனினும், குற்றச்செயலுக்காக கைது செய்யப்பட்ட நபர்களை விடுவிக்க சட்டப்படி அனுமதி இல்லை என அந்த அமைப்பிற்கு தெளிவுபடுத்தப்பட்டது. இந்நிலையில் அதே அமைப்பை சேர்ந்த சிலர் சமூக வலைதளங்களிலும் வாட்ஸ்அப் குழுக்களிலும் காவல்துறை பொய் வழக்குகள் பதிகிறது, குறிப்பிட்ட சமூகத்தினரை குறிவைத்து தாக்குகிறது என காவல்துறைக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பதிவு செய்கின்றனர். “சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என்ற கொள்கையின் அடிப்படையில், புகார்களின் தன்மை மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன. சட்டப்படி மேற்கொள்ளப்படும் காவல் துறையின் நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கத்துடன், உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்