திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் காவலர்களின் வாராந்திர கவாத்து மற்றும் காவல் வாகனங்களை (24-3-2026) அன்று திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், சேகர் தேஷ்முக் சஞ்சய் இ.கா.ப., ஆய்வு மேற்கொண்டார். மேலும் மாநகர ஆயுதப்படை வளாகத்தில் செயல்பட்டுவரும் மோப்பநாய் பிரிவு, ஊர்காவல் படை அலுவலகம், காவலர் நல பல்பொருள் அங்காடி, ஆகியவற்றை ஆய்வு செய்து அங்கு பணிபுரியும் காவலர்களிடம் குறைகளை கேட்டு அவற்றிற்கு தீர்வு கிடைக்க வழிவகை செய்யப்படும் என உறுதி அளித்தார். உடன் காவல் துணை ஆணையர், S.விஜயகுமார் (மேற்கு) காவல் உதவி ஆணையர், மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















