திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டையில் இந்து அறநிலையத்துறை கட்டுபாட்டில் வராத சொக்கலிங்க சாமி கோவில் தெருவில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் தர்மபதி கோவில் வளாகத்தில் சமையல் செய்வது தொடர்பாக இரு தரப்பினருக்கு பிரச்சனை ஏற்பட்டதால் திருநெல்வேலி வருவாய் கோட்டாச்சியர் தலைமையில் விசாரணை நடைபெற்று அதன் தொடர்ச்சியாக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து உரிய பரிகாரம் பெற்றுக்கொள்ள கோட்டாட்சியரால் கடந்த (21.02.2025) அன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனை இருதரப்பும் ஏற்று எழுத்துப்பூர்வமாக ஒப்புகை கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் (04.03.2025) அன்று உரிமையியல் பிரச்சனை உள்ள இடத்தில் நீதிமன்றத்தை அனுகாமல், ஒரு தரப்பினர் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி உள்நுழைந்து அன்னதானம் செய்வதற்கு அடுப்பினை தீ மூட்ட முற்பட்டுள்ளனர். இதற்கு எதிர்தரப்பினர் ஆட்சேபனை தெரிவித்து பாளையங்கோட்டை காவல்துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில் இதனை முறையாக கையாண்ட பாளையங்கோட்டை காவல் துறையினர் எடுத்த நடவடிக்கை கண்ணியமாகவும், நடுநிலைமையுடனும் கையாளப்பட்டுள்ளது . தற்சமயம் இரு தரப்பும் அமைதியான முறையில் வழிபாட்டை சிறப்பாக தொடர்ந்து வரும் நிலையில்
சமூக வலைதளங்களில் காவல்துறை அராஜகம், அன்னதானம் நிறுத்தப்பட்டது. என்பது போல் தவறான செய்திகள் பரப்பி விடப்பட்டு வருகிறது. இது முற்றிலும் தவறான செய்தி என்று திருநெல்வேலி மாநகர காவல் துறை சார்பில் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்