திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர புதிய காவல் ஆணையராக சந்தோஷ் ஹாதிமணி, இ.கா.ப. (01.01.2025)அன்று பொறுப்பேற்று கொண்டார். கடந்த 2011 ஆம் ஆண்டு இந்திய காவல் பணிக்கு தேர்வாகி (IPS), நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் உதவி கண்காணிப்பாளர், (ASP), திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர், (DC), புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், (SP), காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பாளர், சென்னை திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையராகவும் பணிபுரிந்து தற்பொழுது காவல்துறை துணை தலைவராக (DIG) பதவி உயர்வு பெற்று திருநெல்வேலி மாநகரத்தின் 48 – வது காவல் ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்