திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் ரூபேஷ் குமார் மீனா, இ.கா.ப., உத்தரவின் படி காவல் துணை ஆணையர்கள் மேற்பார்வையில் திருநெல்வேலி மாநகர காவல்துறையினர் அனைத்து சமூக வலைதளங்களையும் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். வெவ்வேறு சமுதாயத்தினருக்கும் இடையே பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் செயல்பட்டு சமூக வலைத்தளங்களில் பிரச்சனைகளுக்குரிய பதிவை 2023 ஆம் பதிவிட்ட நபர்கள் மீது 05 வழக்குகளும், 2024 ஆம் ஆண்டில் 07 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் பிரச்சனையை தூண்டும் வகையில் பதிவேற்றும் செய்யப்பட்ட 17 பதிவுகளை நீக்க சமூக வலைதள நிறுவனங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டு அவை நீக்கப்பட்டுள்ளது. இது போன்று தவறான மற்றும் அவதூறு பதிவுகளை பதிவிடுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருநெல்வேலி மாநகர காவல் துறை சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்