திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், தேஷ்முக் சேகர் சஞ்சய், இ.கா.ப., உத்தரவின் பேரில், மாநகர காவல் துணை ஆணையர், விஜயகுமார் தலைமையில் மாநகரப் பகுதிகளில் கொடி அணிவகுப்பு நிகழ்வு நடைபெற்றது. திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட குறுக்குத்துறை, சி.என்.கிராமம், மீனாட்சிபுரம், ம.தி.தா. பள்ளி ஆகிய பகுதிகளிலும், தச்சநல்லூா் காவல் சரகத்தில் ஊருடையார்புரம், தச்சநல்லூர் ரவுண்டானா ஆகிய பகுதிகளிலும் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணி வகுப்பில் எல்லை பாதுகாப்புப் படையினர், சரக காவல் உதவி ஆணையர், காவல் ஆய்வாளர்கள், ஆயுதப்படை போலீசார் என 160-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















