திருநெல்வேலி: வேளாங்கண்ணியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து திருநெல்வேலியை அடுத்த ஆயன்குளம் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே கூட்டப்புளி லெவிஞ்சிபுரத்தை சேர்ந்த பெவிஸ்கோ (64). என்பவர் பலியானார். பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் . விபத்தை ஏற்படுத்திய ஆம்னி பேருந்து ஓட்டுநர் தப்பி ஓட்டம். தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு படுகாயம் அடைந்தவர்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்