திருநெல்வேலி : மதுரை மாநகரில் பல்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட 218 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட சுமார் 953 கிலோ கஞ்சா பொட்டலங்கள் திருநெல்வேலிக்குக் கொண்டுவரப்பட்டன. பின்னர் அவை, நான்குனேரி அருகே பொத்தையடி கிராமத்தில் உள்ள பயோமெடிக்கல் வேஸ்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் வைத்து மதுரை மாநகரக் காவல் ஆணையர், லோகநாதன் தலைமையில் மதுரை மாநகர துணை ஆணையர், அனிதா (வடக்கு) மாநகர காவல் உதவி ஆணையர், சக்திவேல், தடய அறிவியல் துறை அலுவலர் வித்தியாதரணி ஆகியோர் முன்னிலையில் தீவைத்து அழிக்கப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ. 5 கோடி ஆகும்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்