திருநெல்வேலி மாநகரம்: மேலப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு தனியார் ஜவுளி கடையில், நெல்லையை சேர்ந்த பெண் ஊழியரை, 22-09-2019 -ம் தேதியன்று, கங்கைகொண்டானை சேர்ந்த செல்வகுமார் என்பவர் முன்விரோதம் காரணமாக, கடைக்குள் புகுந்து அப்பெண்ணை அடித்து, அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததின் பேரில், பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த மேலப்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.பர்னபாஸ் அவர்கள் மற்றும் போலீசார், குற்றவாளியான செல்வகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.