திருநெல்வேலி: திருநெல்வேலி அருகேயுள்ள குன்னத்தூரைச் சேர்ந்தவர் சக்திபாலன் (37). இவரது சகோதரி பழனியம்மாள் உடல் நலக் குறைவால் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அப்போது அங்கு வந்த பழனியம்மாளின் கணவர் பிரசாந்த்ராஜா (33). மருத்துவமனைக்குள் புகுந்து தகராறில் ஈடுபட்டதோடு, சக்திபாலனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல்துறையினர் வழக்குப்பதிந்து பிரசாந்த்ராஜாவை கைது செய்தனர்.
அதே போல் (21.01.2026) அன்று பாளையங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட வ.உ.சி. மைதானம் அருகே நின்று கொண்டிருந்த ஒருவரிடம், அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த வல்லநாடு பகுதியைச் சேர்ந்த தம்புராஜ் (23). லட்சுமணன் (23). ஆகியோர் கத்தியைக் காட்டி மிரட்டி தாக்கி, பணம் பறிக்க முயன்றுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை காவல்துறையினர் வழக்குப் பதிந்து இருவரையும் (21.01.2026) அன்று கைது செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்















