திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த பெண், திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் தனது புகைப்படத்தை சமூக வலைதளங்களில் அடையாளம் தெரியாத நபர் தவறாக சித்தரித்து பணம் கேட்டு மிரட்டல் விடுப்பதாக புகார் அளித்திருந்தார். மேற்படி நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், அவர்கள் சைபர் கிரைம் காவல் துறையினருக்கு உத்திரவிட்டார்.
உத்தரவின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜு, அவர்கள் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் திரு.ராஜ், உதவி ஆய்வாளர் திரு.ராஜரத்தினம், அவர்கள் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு கேரள மாநிலத்தில் தலைமறைவாக இருந்த வள்ளியூர் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார்(29), என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.